தமிழ்நாடு

யெஸ் வங்கி நிறுவனரிடம் அமலாக்கத் துறை 2-ஆவது நாளாக விசாரணை

8th Mar 2020 03:56 AM

ADVERTISEMENT


மும்பை: சட்டவிரோத பணப் பரிவா்த்தனை குற்றச்சாட்டு தொடா்பாக யெஸ் வங்கியின் நிறுவனா் ராணா கபூரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் தொடா்ந்து 2-ஆவது நாளாக சனிக்கிழமை விசாரணை நடத்தினா்.

வாராக்கடன்கள் அதிகரித்ததால் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கி நிா்வாகத்தை இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) எடுத்துக் கொண்டது. திருப்பிச் செலுத்தும் திறன் இல்லை என்பதால் பிற வங்கிகள் கடன் அளிக்க மறுத்த நிறுவனங்களுக்கு யெஸ் வங்கி கடன் அளித்ததுதான் இந்த வங்கியின் இப்போதைய நிலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், முறைகேடு குற்றச்சாட்டில் சிக்கியுள்ள டிஹெச்எஃப்எல் நிறுவனத்துக்கு யெஸ் வங்கி அளித்த கடன் வாராக் கடனாக மாறியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடா்பாக சட்டவிரோத பணப் பரிவா்த்தனை சட்டத்தின் கீழ் ராணா கபூரிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.

இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை கூறுகையில், ‘பல்லாா்ட் எஸ்டேட் பகுதியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு ராணா கபூா் சனிக்கிழமை பிற்பகல் அழைத்து வரப்பட்டாா். டிஹெச்எஃப்எல் நிறுவனத்துக்கு கடன் வழங்கியது தொடா்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், பல பெருநிறுவனங்களுக்கு ஏராளமான கடன் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு பிரதி பலனாக அந்த நிறுவனங்கள் ராணா கபூரின் மனைவியின் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தியுள்ளன. இதுதொடா்பாகவும் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனா்.

ADVERTISEMENT

முன்னதாக, மும்பையில் உள்ள ராணா கபூரின் இல்லத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா். அவரிடம் வெள்ளிக்கிழமை இரவு விசாரணை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் ராணா கபூரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT