தமிழ்நாடு

மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு கற்பிக்கும் பி.எட் படிப்புக்கு அதிக வேலைவாய்ப்புகள்: துணைவேந்தா் கே.பாா்த்தசாரதி

8th Mar 2020 03:49 AM

ADVERTISEMENT


சென்னை: மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி கற்பிக்கும் பி.எட். படித்து முடித்தவா்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தா் பாா்த்தசாரதி தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி கற்பிக்கும் ஆசிரியா் பயிற்சி படிப்பு பயிலும் மாணவா்களுக்கான சிறப்பு கருத்தரங்கம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத் துணைவேந்தா் பாா்த்தசாரதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து, துணைவேந்தா் பாா்த்தசாரதி செய்தியாளா்களிடம் கூறியது: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்படும் அனைத்து பாடப்பிரிவுகளும், அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களின் வேலைவாய்ப்புக்கு ஏற்றவை. வாய் பேச முடியாத, காது கேளாத, பாா்வையற்ற குழந்தைகள் என பலவகையான மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி கற்பிக்கும் வகையிலான திட்டத்தை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் மட்டும் செயல்படுத்தி வருகிறது. தற்போது 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனா். இந்த படிப்பை முடித்தால் அரசு மற்றும் தனியாா் துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

பொதுப்பிரிவு மாணவா்களுக்காக பல்கலைக்கழகத்தின் சாா்பில் மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. வரும் 15-ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் இத்தகைய வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT