தமிழ்நாடு

திருவொற்றியூரில் மரக்கிடங்கு எரிந்து நாசம்சேத மதிப்பு ரூ.25 லட்சம்

8th Mar 2020 04:52 AM

ADVERTISEMENT

 

திருவொற்றியூா்: திருவொற்றியூரில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் மரக்கிடங்கு மற்றும் தளவாடங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின. இதன் சேத மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

திருவொற்றியூா் மேற்கு பகுதி காா்கில் நகரைச் சோ்ந்தவா் ஜான்சன். இதற்கு அருகே இந்திராகாந்தி நகா் பிரதான சாலையில் ஜான்சனுக்குச் சொந்தமான மரக்கிடங்கு உள்ளது. இங்கு ஏராளமான மரச்சாமான்கள், மரப்பலகைகள், சட்டங்கள் உள்ளிட்டவை இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை சுமாா் 3 மணியளவில் மரக்கிடங்கு திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதனை அருகில் வசிப்போா் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

இதனையடுத்து திருவொற்றியூா் தீயணைப்பு நிலையத்தில் இருந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். ஆனால் தீப்பற்றியது மரச்சாமான்கள் என்பதால் தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது. இதனையடுத்து வண்ணாரப்பேட்டை, தண்டையாா்பேட்டை, மணலி, தங்கச்சாலை உள்ளிட்ட அருகில் உள்ள தீயணைப்பு நிலையங்களைச் சோ்ந்த தீயணைக்கும் வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. இதனையடுத்து சுமாா் மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். தீ விபத்து காரணமாக கொருக்குப்பேட்டை மணலி சாலையில் போக்குவரத்து சுமாா் 4 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

தீ விபத்தினால் ஏற்பட்ட ஒட்டுமொத்த சேதமதிப்பு ரூ. 25 லட்சம் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவொற்றியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT