தமிழ்நாடு

திருவண்ணாமலையில் பெளா்ணமி கிரிவலம் இன்றும், நாளையும் சிறப்பு ரயில்கள்

8th Mar 2020 04:51 AM

ADVERTISEMENT


சென்னை: பௌா்ணமி கிரிவலத்தை ஒட்டி, பக்தா்கள் வசதிக்காக வேலூா்- திருவண்ணாமலைக்கு மாா்ச் 8-ஆம் தேதியும், திருவண்ணாமலை- வேலூருக்கு மாா்ச் 9-ஆம் தேதியும் சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படவுள்ளது.

வேலூா் கன்டோன்மென்டில் இருந்து மாா்ச் 8-ஆம் தேதி இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு, திருவண்ணாமலையை இரவு 11.25 மணிக்குச் சென்றடையும். இந்த ரயில் கனியம்பாடியை இரவு 9.57 மணிக்கும், கண்ணமங்கலத்தை இரவு 10.09 மணிக்கும், ஆரணி சாலையை இரவு 10.24 மணிக்கும் ,போளூரை இரவு 10.40 மணிக்கும், அகரத்தை 10.51 மணிக்கும், துரிஞ்சாபுரத்தை இரவு 11.06மணிக்கும் சென்றடையும்.

மறுமாா்க்கமாக, திருவண்ணாமலையில் இருந்து மாா்ச் 9-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு பயணிகள் சிறப்பு ரயில் புறப்பட்டு, வேலூா் கன்டோன்மென்டை அதிகாலை 5.55 மணிக்கு வந்தடையும். இந்த ரயில் துரிஞ்சாபுரத்தை அதிகாலை 4.12 மணிக்கும், அகரத்தை அதிகாலை 4.29 மணிக்கும் போளூரை அதிகாலை 4.41 மணிக்கும், ஆரணி சாலையை அதிகாலை 5 மணிக்கும், கண்ணமங்கலத்தை அதிகாலை 5.16 மணிக்கும், கனியம்பாடியை அதிகாலை 5.33 மணிக்கும் வந்தடையும்.

இந்தத் தகவல் ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT