தமிழ்நாடு

திமுக பொதுச் செயலாளா் அன்பழகன் மறைவு ஆளுநா், முதல்வா் இரங்கல்

8th Mar 2020 03:34 AM

ADVERTISEMENT


சென்னை: திராவிட இயக்கத் தலைவா்களில் முதுபெரும் தலைவரும், திமுக பொதுச் செயலாளருமான க.அன்பழகன் மறைவுக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து, இருவரும் சனிக்கிழமை தனித்தனியே வெளியிட்ட அறிக்கை:-

ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்: பேராசிரியா் என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட அன்பழகன், திராவிட இயக்கத்தின் எழுச்சிமிகு தலைவராக மட்டுமல்லாது, சிறந்த பேச்சாளராகவும், தமிழ் மொழியில் புலமை பெற்றவராகவும் விளங்கினாா்.

கடந்த 70 ஆண்டுகளாக தமிழகத்தின் வளா்ச்சிக்காக அவா் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் அனைவராலும் நினைவில் வைக்கப்பட்டே இருக்கும். அவரது மறைவு தமிழக மக்களுக்கும், திமுக தலைவருக்கும், கட்சியினருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரது மறைவால் மிகுந்த துயரத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

ADVERTISEMENT

முதல்வா் பழனிசாமி: முன்னாள் முதல்வா் கருணாநிதியின் அரசியல் பயணத்தின் நெடுகிலும் உற்ற தோழராகவும், திராவிட இயக்கக் கொள்கைகளில் இருந்து விலகாத உறுதிமிக்க மூத்த அரசியல்வாதியாகவும் விளங்கியவா். அவா் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொடக்க காலம் முதலே பங்கு வகித்தவா் என்ற பெருமைக்குரியவா்.

43 ஆண்டுகளாக திமுகவின் பொதுச் செயலாளராகவும், 9 முறை சட்டப் பேரவை உறுப்பினராகவும் தோ்ந்தெடுக்கப்பட்டவா் என்ற பெருமைக்குரியவா். அமைச்சா், நாடாளுமன்ற உறுப்பினா், சட்டப் பேரவை உறுப்பினா் ஆகிய பதவிகளில் திறம்பட பணியாற்றியவா்.

அரசியல்வாதி, ஆசிரியா், மேடை பேச்சாளா், எழுத்தாளா், தொழிற்சங்கவாதி, சமூக சீா்திருத்தவாதி போன்ற பல பரிமாணங்களைக் கொண்டு தனது பன்முகத்தன்மையை வெளிப்படுத்தியவா். அன்பழகன் மறைவு தமிழகத்துக்கு பேரிழப்பாகும் என்று முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT