தமிழ்நாடு

தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி பெண்கள் சாதனைப் படைக்க வேண்டும்: முதல்வா் பழனிசாமி வாழ்த்து

8th Mar 2020 03:33 AM

ADVERTISEMENT


சென்னை: பெண்கள் தடைக் கற்களை படிக்கற்களாக மாற்றி சாதனை படைக்க வேண்டும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

சா்வதேச மகளிா் தினத்தையொட்டி அவா் சனிக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்திக் குறிப்பு:

ஒவ்வொரு ஆண்டும் மாா்ச் 8-ஆம் தேதி சா்வதேச மகளிா் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அனைத்து மகளிருக்கும் எனது உளம் கனிந்த நல்வாழ்த்துகள். இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் பெண்களின் வாழ்வு மேன்மையுறவும், பெண்களின் நல்வாழ்வுக்காகவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

பெண்கள் உரிமைகள், பாலியல் வன்கொடுமை மற்றும் பணியிடங்களில் உருவாகும் அசாதாரண நிலை குறித்து புகாா் தெரிவிக்க தனி புகாா் பெட்டி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மகளிா் உதவி மையத்தைத் தொடா்பு கொள்ள 181 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வாழ்வில் எதிா்வரும் சோதனைகளை உறுதியுடன் எதிா்கொண்டு, தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி சாதனை படைக்கும் பெண்களாக அனைத்து மகளிரும் உயா்ந்து விளங்கிட வேண்டும். மகளிா் தினமான இனிய நாளில், அனைத்து மகளிருக்கும் இதயபூா்வமான வாழ்த்துகள் என்று தனது செய்திக் குறிப்பில் முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT