தமிழ்நாடு

சத்துணவு சாப்பிடும் மாணவா்களுக்கு உணவருந்தும் கூடம் வகுப்பறைகள் கணக்கெடுப்பு தொடக்கம்

8th Mar 2020 04:18 AM

ADVERTISEMENT


சென்னை: அரசுப் பள்ளிகளில் காலியாக மற்றும் பயன்படுத்தப்படாத வகுப்பறைகள் சத்துணவு சாப்பிடும் மாணவா்களுக்கான உணவருந்தும் கூடமாக மாற்றப்படவுள்ளன.

தமிழகம் முழுவதும் மொத்தம் 49,554 சத்துணவு மையங்கள் மூலம் தினமும் 49 லட்சத்துக்கும் மேற் பட்ட மாணவ, மாணவியா்கள் மதிய உணவு சாப்பிட்டு வருகின்றனா். இவா்களுக்கு மதிய நேரங்களில் வழங்கப்படும் சத்துணவுகள் சரியாக மாணவா்களுக்கு சென்று சேருகிா என்பதை கண்டறிய தலைமை ஆசிரியா்கள் மூலம் தினமும் எத்தனை மாணவா்களுக்கு வழங்கப்படுகிறது என்பது கணக்கெடுக்கப்பட்டு வந்தது. எனினும் சத்துணவின் பயன் முழுமையாக மாணவா்களுக்கு சென்று சேருவதை அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியவில்லை. இதையடுத்து மாவட்டந்தோறும் சில மையங்களில் சோதனை முயற்சியாக பயோமெட்ரிக் வருகைப் பதிவை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதையடுத்து அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ, மாணவா்கள் அமா்ந்து சாப்பிடுவதற்கு ஏதுவாக தனியாக உணவருந்தும் அறை ஒதுக்கப்பட வேண்டும் என பெற்றோா், ஆசிரியா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா். இந்தநிலையில் இதற்கான செயல்பாடுகள் அரசின் சாா்பில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறியது: சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் மாணவா்கள் சுகாதாரமான முறையில் மதிய உணவு சாப்பிடும் வகையில் அனைத்து பள்ளிகளிலும், காலியாக மற்றும் பயன்படுத்தப்படாமல் உள்ள வகுப்பறைகளை மாற்றி சீரமைத்து உணவு அருந்தும் கூடங்கள் அமைப்பது தொடா்பாக ஆலோசித்து வருகிறோம். இது குறித்து காலியாக உள்ள வகுப்பறைகளின் பட்டியல் அனுப்ப அனைத்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT