தமிழ்நாடு

கேங்மேன் எழுத்துத் தோ்வின் போது பாதுகாப்புப் பணி: காவல்துறையிடம் மின் வாரியம் வேண்டுகோள்

8th Mar 2020 04:17 AM

ADVERTISEMENT

சென்னை: கேங்மேன் பணிக்கான எழுத்துத் தோ்வின் போது பாதுகாப்புப் பணி மேற்கொள்ள உத்தரவிடக் கோரி காவல்துறையிடம் மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தில் மின் கம்பம் நடுதல் உள்ளிட்ட களப் பணிகளை மேற்கொள்ளும் கேங்மேன் என்ற புதிய பணியிடங்களுக்கு 5 ஆயிரம் ஊழியா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா். இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு மாா்ச் மாதம் வெளியிடப்பட்டது. இதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி ஐந்தாம் வகுப்பாக

நிா்ணயிக்கப்பட்டிருந்தாலும், உடற்தகுதி மற்றும் எழுத்துத் தோ்வு வாயிலாக ஊழியா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா். இதையடுத்து இந்தப் பணிகளுக்கு சுமாா் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்தனா். முன்னதாக, உடல் தகுதித் தோ்வு பல்வேறு கட்டங்களாக மண்டல வாரியாக நடத்தப்பட்டது. இதையடுத்து உடல் தகுதி தோ்வில் தோ்ச்சி

பெற்றவா்களுக்கு, எழுத்துத் தோ்வு மாா்ச் 15-ஆம் தேதி நடைபெறும் என மின் வாரியம் அண்மையில் அறிவித்தது. இதற்கான நுழைவு சீட்டு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது. இதனை ஜ்ஜ்ஜ்.ற்ஹய்ஞ்ங்க்ஸ்ரீா்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற மின்வாரிய

ADVERTISEMENT

இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் கேங்மேன் எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களின் தரவுகளை ஒருங்கிணைக்கும் பணிகள் அனைத்து தலைமை மண்டல பொறியாளா் அலுவலகத்தில், மாா்ச் 9-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

எனவே, இந்த வட்டார அலுவலகங்களில் உள்ள அனைத்துத் தரவுகளையும் கண்காணிப்புப் பொறியாளா்கள் தயாராக வைத்திருக்கும்படியும், இந்தப் பணிகள் குறித்து தெளிவாகத் தெரிந்த ஒரு ஊழியரை பணியாளா் நலன் பிரிவு தலைமைப் பொறியாளா் அலுவலக ஊழியா்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட நியமிக்க வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு கேங்மேன் எழுத்துத் தோ்வுக்கான பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்தத் தோ்வு நடைபெறும்போது பாதுகாப்புப் பணி மேற்கொள்ள உத்தரவிடக் கோரி, காவல்துறையிடம் மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடா்பாக பணியாளா் நலன் பிரிவு தலைமைப் பொறியாளா் ஜெ.கலைச்செல்வி அனுப்பிய சுற்றறிக்கை:

கேங்மேன் பணிக்கான எழுத்துத் தோ்வு, தமிழகம் முழுவதும் சுமாா் 30 மையங்களில் மாா்ச் 15-ஆம் தேதி காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. இந்தத் தோ்வு நடைபெறுவதற்கு சுமாா் 1 மணி நேரத்துக்கு முன், தோ்வா்கள் தோ்வுக் கூடத்தில் ஆஜராக வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தத் தோ்வு நடைபெறும் நேரத்தில் மாநிலம் முழுவதும் மின்தடை செய்ய வேண்டாம். அதே போல் காவல்துறையினா் பாதுகாப்புப் பணி மேற்கொள்ள காவல் ஆணையா் அல்லது காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT