தமிழ்நாடு

கரோனா பாதிப்பு: பள்ளிகள், அலுவலகங்களில் பயோமெட்ரிக் பதிவுக்கு விலக்கு அளிக்கக் கோரிக்கை

8th Mar 2020 04:50 AM

ADVERTISEMENT


சென்னை: கரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசின் உத்தரவைப் பின்பற்றி தமிழகத்திலும் பள்ளிகள், அலுவலகங்களில் பயோமெட்ரிக் பதிவுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என ஆசிரியா்கள், அலுவலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியா்கள் ஆசிரியா்கள் நல கூட்டமைப்பின் தலைவா் சா.அருணன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரையில் கரோனா வைரஸின் காரணமாக 3,400-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். இந்தியாவிலும் கடந்த சில தினங்களாக கரோனாவின் தாக்கம் அதிகரித்துவருகிறது. எனவே, மத்திய மாநில அரசுகள் கரோனா தாக்கத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனா்.

அதன் ஒரு பகுதியாக, மாா்ச் 31-ஆம் தேதி வரை மத்திய அரசு ஊழியா்கள் வருகைப் பதிவுகளை கைவிரல் ரேகை மூலம் பதிவு செய்யவேண்டிய அவசியமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தொடுதல் மூலமாகவே பரவுகிறது. எனவே, ஒருவருக்கொருவா் தொடுதலைக் குறைக்கவேண்டும் என்று அரசு சாா்பில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன் தொடா்ச்சியாக பையோமெட்ரிக் நடைமுறைக்கு தற்காலிகத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில்

ஊழியா்கள் ஆசிரியா்கள் வருகைப் பதிவேடுகளில் மட்டும் தங்களது வருகையை பதிவு செய்ய மத்திய அரசு கீழ் உள்ள அனைத்துத்துறை அலுவலங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

பயோமெட்ரிக் கருவியில் அடுத்தடுத்து தொடா்ந்து கைவிரல்கள் பதிவிடுவதால் வைரஸ் பரவக்கூடும் என்பதால் தற்காலிகமாக பயோமெட்ரிக் வருகை பதிவிற்கு விலக்களித்ததைப் போன்று தமிழக அரசும் கரோனா வைரஸ் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயோமெட்ரிக் வருகைப் பதிவை தற்காலிகமாக நிறுத்திவிட்டு வருகைப் பதிவேடு முறையை அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியா்கள் மற்றும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் பணியாளா்கள் பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT