தமிழ்நாடு

அரசுத் தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறியதால் குற்றவாளியை விடுதலை செய்ய முடியாது: உயா் நீதிமன்றம் உத்தரவு

8th Mar 2020 03:47 AM

ADVERTISEMENT


சென்னை: கொலை வழக்கில், சம்பவத்தை நேரில் பாா்த்த சாட்சிகள் பி சாட்சிகளாக மாறிவிட்டதாலேயே, குற்றவாளியை விடுதலை செய்ய முடியாது என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அரும்பாக்கத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மீது கடந்த 2003-ஆம் ஆண்டு கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு விசாரணை நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. இந்த தண்டனையை எதிா்த்து ராதாகிருஷ்ணன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், சம்பவம் நடந்தபோது ராதாகிருஷ்ணனுக்கு 18 வயது பூா்த்தி அடையவில்லை. அவரது வழக்கை விசாரித்து விசாரணை நீதிமன்றம் தண்டனை வழங்கியது தவறு. இந்த சம்பவத்தைக் கண்ணால் பாா்த்த சாட்சிகளும் பி சாட்சிகளாக மாறிவிட்டனா். எனவே மனுதாரரை விடுதலை செய்ய வேண்டும் என வாதிட்டாா். இதற்கு அரசுத் தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்குரைஞா் அய்யப்பராஜ் எதிா்ப்பு தெரிவித்தாா். மேலும் மனுதாரா் ராதாகிருஷ்ணன் மீது 35 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் இருந்தவா் என வாதிட்டாா். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் பி சாட்சிகளாக மாறிவிட்டதால், குற்றவாளியை விடுதலை செய்ய முடியாது. எனவே ராதாகிருஷ்ணனுக்கு விதிக்கப்பட்டத் தண்டனையை 5 ஆண்டுகளாக குறைத்து மேல் முறையீட்டு வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT