தமிழ்நாடு

ஆண்களுக்கு நிகராக ஊதியம் வழங்க வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட பெண்கள் கைது

6th Mar 2020 02:25 PM

ADVERTISEMENT

ஆண்களுக்கு நிகராக ஊதியம் வழங்க வலியுறுத்தி திருவாரூரில் மறியலில் ஈடுபட்ட உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழுவினர் சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெண்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், ஆண்களுக்கு நிகரான ஊதியம் வழங்க வேண்டும், 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.

சாலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி பெண்கள் கோஷங்களை எழுப்பினர். போராட்டத்துக்கு சிஐடியு மாவட்ட தலைவர் இரா மாலதி தலைமை வகித்தார். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT