தமிழ்நாடு

கூடன்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி கட்டடம்: கருத்து கேட்புக்கூட்டம் மீண்டும் ஒத்திவைப்பு

6th Mar 2020 06:59 PM

ADVERTISEMENT

 

கூடன்குளம்: கூடன்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி கட்டடம் கட்டுவது தொடர்பாக நடக்கவிருந்த கருத்துக்  கேட்புக் கூட்டம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கூடன்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி 5 கி.மி சுற்றளவில் கட்டிடம் கட்ட தேசிய அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தில் அனுமதி பெற வேண்டும் என்ற அரசானை தொடர்பாக துணை இயக்குனர் (ஊராட்சிகள்) தலைமையில் நடக்கவிருந்த உள்ளூர் திட்ட குழும பொதுமக்கள் கருத்து கேட்புகூட்டம் இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

நிர்வாக காரணங்களால் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக ராதாபுரம் ஊராட்சி ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT

கடந்த 6ம் தேதி நடைபெறுவதாக இருந்த கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் மற்றும் கூடன்குளம் எதிர்ப்பு போராட்ட குழுவினர்  முன்னறிவிப்பு ஏதுமின்றி கூட்டம் நடைபெறுவதாக கடும்  எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அன்று நடைபெறும் கூட்டமும் ரத்து செய்யப்பட்டது .

ADVERTISEMENT
ADVERTISEMENT