தமிழ்நாடு

பெண்சிசுக் கொலை மீண்டும் தலைதூக்குவது வேதனை அளிக்கிறது: மு.க.ஸ்டாலின்

6th Mar 2020 01:11 PM

ADVERTISEMENT

பெண்சிசுக் கொலை மீண்டும் தலைதூக்குவது வேதனை அளிக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது டிவிட்டரில், பெண்மையைப் போற்றும் தமிழகத்தின் பண்பாட்டுப் பெருமைக்கு அவமானமாக மீண்டும் பெண்சிசுக் கொலை தலைதூக்குவது வேதனை அளிக்கிறது.

மதுரை மாவட்டம் புள்ளநேரியில் 2-வதாகப் பிறந்த பெண் குழந்தையைப் பெற்றோரே கள்ளிப்பால் ஊற்றிக் கொன்று புதைத்திருப்பது இதயம் உள்ளோர் அனைவரையும் பதற வைக்கிறது.

கண்டனத்திற்குரிய இச்செயலில் ஈடுபட்டோர்-துணைநின்றோர் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

ADVERTISEMENT

தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற மாநிலமாகி வரும் நிலையில் பெண்குழந்தைகள்பாதுகாப்புநாள் கொண்டாடும் ஆட்சியாளர்கள் ஏட்டளவில் இல்லாமல் நடைமுறையில் பெண்சிசுக்களை பாதுகாக்க வேண்டும்! இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்ததால், பிறந்து ஒரு மாதமே ஆன பெண் சிசுவுக்கு பெற்றோரின் ஒப்புதலோடு எருக்கம்பால் கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT