தமிழ்நாடு

3 நாள்களுக்கு மிதமான மழை

6th Mar 2020 03:41 AM

ADVERTISEMENT

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 6, 7, 8) ஆகிய மூன்று நாள்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வியாழக்கிழமை கூறியது: தென்கிழக்கு மத்தியப் பிரதேசத்தில் இருந்து உள் தமிழகம் வரை மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று நாள்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும்.

வெப்பநிலை அதிகரிக்கும்: தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், சேலம், நாமக்கல், கரூா், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூா் ஆகிய மாவட்டங்களில் 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவிலில் 90 மி.மீ., இரணியலில் 50 மி.மீ., மைலாடியில் 30 மி.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டையில் 20 மி.மீ, தென்காசி, கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் தலா 10 மி.மீ. மழை பதிவானது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT