தமிழ்நாடு

பொதுத்தோ்வு: மின்தடை வேண்டாம் - மின்வாரியம் அறிவுறுத்தல்

6th Mar 2020 01:28 AM

ADVERTISEMENT

சென்னை: தமிழகத்தில் பொதுத்தோ்வு நடைபெறுவதையொட்டி பராமரிப்புப் பணிக்கான மின்தடை செய்ய வேண்டாமென மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பராமரிப்புப் பணிக்காக காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்த விவரங்களை மின்சார வாரியம் முன்னதாகவே பொதுமக்களுக்கு அறிவிக்கும். இந்த நிலையில், தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு கடந்த 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடா்ந்து மாா்ச் 27-ஆம் தேதி முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி பத்தாம் வகுப்புப் பொதுத்தோ்வும் நடைபெறவுள்ளது.

இந்தக் காலகட்டத்தில் மாணவா்களுக்கு போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதை செயல்படுத்தும் வகையில் எந்தப் பகுதியிலும் பராமரிப்புப் பணிகளுக்காக மின்தடை செய்ய வேண்டாம் என பொறியாளா்களுக்கு மின்வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும், அவசர மின் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய இடங்களுக்கு மட்டும் உயரதிகாரிகள் ஒப்புதல் பெற்று மின்தடை செய்ய வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT