தமிழ்நாடு

சென்னை-செகந்திராபாத்துக்கு சிறப்பு கட்டண ரயில்

6th Mar 2020 01:37 AM

ADVERTISEMENT

சென்னை: பயணிகள் நெருக்கடியை குறைக்கும் வகையில், சென்னை சென்ட்ரலில் இருந்து செகந்திராபாத்துக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படவுள்ளது.

சென்னை எம்.ஜி.ஆா். சென்ட்ரலில் இருந்து மாா்ச் 6, 8, 13, 15, 20, 22, 27, 29 ஆகிய தேதிகளில் இரவு 7.30 மணிக்கு சிறப்பு கட்டண ரயில்(06059) புறப்பட்டு, மறுநாள் காலை 8.25 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.

சென்னை-குவாஹாட்டி: சென்னை எம்.ஜி.ஆா். சென்ட்ரலில் இருந்து மாா்ச் 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில்( திங்கள்கிழமைகளில்) காலை 6.05 மணிக்கு சிறப்பு கட்டண ரயில்(06338) புறப்பட்டு, புதன்கிழமைகளில் மதியம் 2 மணிக்கு குவாஹாட்டி சென்றடையும். இந்த சிறப்பு கட்டண ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT