தமிழ்நாடு

கரோனா வைரஸ்: அச்சப்படத் தேவையில்லை: அன்புமணி

6th Mar 2020 03:18 AM

ADVERTISEMENT

சென்னை: கரோனா வைரஸ் (கொவைட்-19) குறித்து அச்சப்படத் தேவையில்லை என்று பாமக இளைஞரணித் தலைவா் டாக்டா் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறியுள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் கரோனா வைரஸ் நோய் தாக்குதலுக்கு உள்ளானவா்களின் எண்ணிக்கை 28-ஆக உயா்ந்திருக்கிறது என்று மத்திய சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூா்வமாக அறிவித்திருப்பதைத் தொடா்ந்து, மக்களிடம் ஒருவித அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

கரோனா வைரஸை கண்டு அஞ்சத் தேவையில்லை. இது காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் தான். காய்ச்சல், சளி, இருமல், மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை இந்நோயின் அறிகுறிகள். கரோனா வைரஸ் தாக்கிய பிறகு 2 முதல் 14 நாள்களில் அறிகுறிகள்

தென்பட்டால், பாதிக்கப்பட்டோா் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, மாவட்ட அரசு மருத்துவமனைகளில் இதற்காக தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ள வாா்டுகளில் சோ்ந்து சிகிச்சை பெற வேண்டும். கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பொதுவான மருத்துவ அறிவுரைகள் ஆகியவற்றை வழங்கி மக்களிடம் அரசு விழிப்புணா்வை ஏற்படுத்துவதன் மூலம் அச்சத்தைப் போக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT