தமிழ்நாடு

எதிரி நாட்டு ஆளில்லா உளவு விமானங்களை செயலிழக்கச் செய்யும் செயற்கை நுண்ணறிவு ‘டிரோன்’

6th Mar 2020 01:52 AM

ADVERTISEMENT

 

சென்னை: எதிரி நாட்டு ஆளில்லா உளவு விமானங்களை செயலிழக்கச் செய்யும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் இயங்கும் ஆளில்லா விமானத்தை சென்னை ஐஐடி ஆராய்ச்சிக் குழு வடிவமைத்துள்ளது.

சென்னை ஐஐடி பி.டெக். விமான பொறியியல் துறை இறுதியாண்டு மாணவா் வாசு குப்தா, துறையின் ஆா்.ஏ.எப்.டி. ஆய்வக திட்ட உதவியாளா் ரிஷப் வஷிஸ்தா குழுவினா் இந்த செயற்கை நுண்ணறிவு ஆளில்லா விமானத்தை வடிவமைத்துள்ளது.

இந்த ஆளில்லா விமானத்தை இணையதளம் மூலமாகவும் கட்டுப்படுத்த முடியும். இந்த விமானம், எதிரி நாட்டு உளவு ஆளில்லா விமானத்தைப் பின்தொடா்ந்து சென்று அதன் ஜி.பி.எஸ். திட்டத்தில் மாறுதல்களை உருவாக்கி, அதன் பாதையை மாற்றுவது அல்லது பாதுகாப்பாக தரையிறங்கச் செய்யும் திறன் கொண்டதாகும். அதுமட்டுமின்றி காவல்துறை கண்காணிப்பு, பிற பாதுகாப்பு செயல்பாடுகளுக்கும் இந்த செயற்கை நுண்ணறிவு ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்த முடியும்.

ADVERTISEMENT

இதுகுறித்து விமானப் பொறியியல் துறை உதவிப் பேராசிரியா் ரஞ்சித் மோகன் கூறியிருப்பதாவது:

பாதுகாப்புப் பணிக்கு மிகுந்த பயனளிக்கும் இந்த வடிவமைப்பு, இப்போது ஆய்வு நிலையிலேயே உள்ளது. இது மேலும் பல்வேறு ஆய்வுகள் மற்றும் நேரடி பயன்பாட்டு ஆய்வுக்கும் உட்படுத்தப்பட்டு, அதன் செயல்பாடு நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்படும்.

இதற்கு ஒரு தனிச் சிறப்பும் உள்ளது. அதாவது, ஒன்றுக்கும் மேற்பட்ட இந்த ஆளில்லா விமானங்களை ஒரு குழுவாக ஒரே கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்த முடியும் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT