தமிழ்நாடு

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஹரிச்சந்திரன் வேடத்தில் மனு கொடுக்க வந்த நாடகக் கலைஞர்

2nd Mar 2020 01:21 PM

ADVERTISEMENT

 

நாடக கலைஞர்களுக்கு இலவச பஸ்பாஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஹரிச்சந்திரன் வேடத்தில் மனு கொடுக்க வந்த நாடக நடிகர் கலைமணியால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

அவர் அளித்த மனுவில், 

நாடக கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுபெற்ற கலைஞர்களுக்கு அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்க வேண்டுதல், நலிந்த கலைஞர்களுக்கான ஓய்வு ஊதியம் ரூ.2000/- என்பதை உயர்த்தி வழங்க வேண்டுதல், கலைமாமணி விருதுபெற்ற கலைஞர்களுக்கு ஓய்வு ஊதியம் மாதந்தோறும் ரூ.5000/- வழங்க உதவிட வேண்டுதல், கலைமாமணி விருதுபெற்ற கலைஞர்கள் தொழில் செய்யபோகும் போது விபத்து ஏற்பட்டால் கலைஞர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டுதல், நாடக நடிகர்களுக்கு மானியத்தில் இசைக்கருவி, ஆடை, ஆபரணங்கள் இயல், இசை நாடக மன்றம் மூலம் வழங்க உதவி செய்ய ஏற்பாடு செய்ய வேண்டுதல், 

ADVERTISEMENT

இசை நாடக நடிகர்களுக்கு தொகுப்பு வீடு இலவசமாகக் கட்டித் தர வேண்டுதல், நலிந்துவரும் இசை நாடகக் கலை மென்மேலும் வளர்ச்சியடைய இசை நாடக தொழிற்பட்டறை வழங்க வேண்டுதல், நகரங்களில் இரவு 10 மணிக்குள் நாடகம் நடத்தி முடிக்க வேண்டும் என்பதை, இரவு 2 மணி வரை நாடகம் நடத்த அனுமதி வழங்க வேண்டுதல், 

மேற்கண்ட 8 அம்ச கோரிக்கையை நிறைவேற்றித் தர வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஹரிச்சந்திரன் வேடத்தில் நாடக நடிகர் கலைமணி மனு கொடுத்துள்ளார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT