தமிழ்நாடு

திருவொற்றியூர், குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு

2nd Mar 2020 07:13 PM

ADVERTISEMENT

 

சென்னை: தமிழகத்தில் திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிகள் காலியானதாக தேர்தல்  ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிகளின் திமுக எம்எல்ஏக்கள் கே.பி.பி.சாமி,மற்றும் காத்தவராயன் ஆகிய இருவரும் சமீபத்தில் உடல்நலக்குறைவால் அடுத்தடுத்த நாட்களில் மரணமடைந்தனர்.

இதையடுத்து திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு வெளியிடக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு தமிழக சட்டப்பேரவை செயலகம் சார்பில் கடிதம் அனுப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில் தமிழகத்தில் திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிகள் காலியானதாக தேர்தல்  ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

மேலும் அடுத்த ஆண்டு மே 25ஆம் தேதியுடன் அதிமுக ஆட்சி முடிகிறது என்பதால், 6 மாத காலத்திற்குள் இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற விதி உள்ளதாகவும் தேர்தல் ஆணையத்தின் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT