தமிழ்நாடு

தூத்துக்குடியில் 19,782 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர்

2nd Mar 2020 01:34 PM

ADVERTISEMENT

 

தூத்துக்குடி மாவட்டத்தில் 19,782 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதினர். மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் நேரில் ஆய்வு செய்தனர்.

தமிழகம் முழுவதும் புதிய பாடத்திட்டதின் கீழ் பனிரெண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு திங்கள்கிழமை தொடங்கி வரும் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவடத்தில் 85 தேர்வு மையங்களில் 19 ஆயிரத்து 782 மாணவ, மாணவிகள் பங்கேற்று பனிரெண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு எழுதினர். தேர்வைக் கண்காணிக்க 228 பறக்கும் படையினர் அமைக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இதனிடையே, தூத்துக்குடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் தேர்வினை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் மாவட்ட முதன்மை அலுவலர் ஞான கொளரி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT