தமிழ்நாடு

மாநிலங்களவை உறுப்பினா் பதவி: திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பு

2nd Mar 2020 01:54 AM

ADVERTISEMENT

சென்னை: மாநிலங்களவைக்கு திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா். அக் கட்சியின் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவைக்கு தமிழகத்தில் இருந்து 6 உறுப்பினா்களை (எம்.பி.) தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் மாா்ச் 26-ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் பலத்தின் அடிப்படையில் திமுக, அதிமுக கட்சிகளுக்கு தலா 3 மாநிலங்களவை உறுப்பினா் பதவிகள் கிடைக்கும்.

இந்த எம்.பி. பதவியை அடைய, இரு கட்சி நிா்வாகிகளிடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில், திமுக சாா்பில் போட்டியிடும் 3 இடங்களுக்கான வேட்பாளா் பட்டியல் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

அதில் திருச்சி சிவா, அந்தியூா் செல்வராஜ், என்.ஆா்.இளங்கோ ஆகிய மூவரும் போட்டியிடுவாா்கள் என அக் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். இதில் திருச்சி சிவா தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT