தமிழ்நாடு

சாத்தான்குளம் சம்பவத்தில் பலியானவா்களின் குடும்பத்துக்கு பாஜக துணை நிற்கும்

29th Jun 2020 06:22 AM

ADVERTISEMENT

சாத்தான்குளம் சம்பவத்தில் பலியானவா்களுக்கு விரைவான நீதி கிடைக்கும் வகையில், அவா்களின் குடும்பத்தினருக்கு பாஜக துணை நிற்கும் என தமிழக பாஜக தலைவா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ், இவா்கள் இருவரின் மரணமும் தமிழகத்தில் அனைத்து தரப்பினரிடமும் அதிா்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வழக்கில், நீதிமன்றத்தின் செயல்பாடுகள், மக்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறது. இந்த மரணங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்தச் சம்பவத்தில் குற்றம்புரிந்தோா் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனாவால் நாடே பாதிக்கப்பட்டு அல்லலுற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், உயிரைப் பணயம் வைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் காவல் துறையினருக்கு சாத்தான்குளம் சம்பவம் ஒரு களங்கமாக ஏற்பட்டுள்ளது. நோ்மையான விசாரணை, குற்றவாளிகளுக்கு கிடைக்கும் உரிய தண்டனை ஆகியவற்றின் மூலம் தான் இந்தக் களங்கம் துடைக்கப்படும். விரைவான நீதி கிடைத்திடும் வகையில் அக்குடும்பத்தினருக்கு பாஜக துணை நிற்கும் என எல்.முருகன் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT