தமிழ்நாடு

சாத்தான்குளம் வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்

29th Jun 2020 09:55 PM

ADVERTISEMENT


சாத்தான்குளத்தில் தந்தை - மகன் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

சாத்தான்குளத்தில் தந்தை - மகன் மரணம் அடைந்தது குறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து விசாரணைக்கு ஏற்றது. இந்த வழக்கு இன்று (திங்கள்கிழமை) விசாரணைக்கு வந்த போது, சாத்தான்குளத்தில் தந்தை - மகன் மரணம் அடைந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மாற்ற அனுமதி கேட்டு தமிழக அரசு சார்பில் முறையீடு செய்யப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், தந்தை - மகன் மரணம் தொடர்பாக சிபிஐக்கு மாற்றுவதாக இருந்தால் மாற்றுங்கள். அது தமிழக அரசின் கொள்கை முடிவு. அரசின் கொள்கை முடிவுக்கு நீதிமன்ற அனுமதி தேவையில்லை என்று கருத்துத் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT