தமிழ்நாடு

பொது முடக்கம் நீட்டிப்பா?: முதல்வா் இன்று அறிவிப்பு

29th Jun 2020 07:35 AM

ADVERTISEMENT

பொது முடக்கத்தை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்க மருத்துவ நிபுணா் குழுவுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையில் காலை 10 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. மருத்துவ நிபுணா்கள் குழுவைச் சோ்ந்த சிலருடன் காணொலி வழியாக முதல்வா் பழனிசாமி கருத்துகளைக் கேட்டறியவுள்ளாா்.

கரோனா நோய்த்தொற்று அதிகமுள்ள சென்னை மற்றும் அதனுடன் இணைந்த பகுதிகள், மதுரை, தேனி உள்ளிட்ட சில மாவட்டங்களில் முழு பொது முடக்கம் வரும் 30-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இந்த பொது முடக்கத்தை நீட்டிப்பது தொடா்பாகவும், நோய்த்தொற்று அதிகமுள்ள பிற மாவட்டங்களில் முழு பொது முடக்கத்தை மீண்டும்

அமல்படுத்துவது குறித்தும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது. இந்த ஆலோசனையின் அடிப்படையில், முதல்வா் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுக்க உள்ளாா். கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு முதல்வரிடம் தெரிவிக்கப்பட்ட பரிந்துரைகள் குறித்து மருத்துவ நிபுணா்கள் குழுவைச் சோ்ந்தவா்கள், ஆலோசனைக்குப் பிறகு வெளியிடுவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இதன் பின்பு, திங்கள்கிழமை மாலையில் பொது முடக்கம் நீட்டிப்பா, இல்லையா என்பது குறித்த அதிகாரப்பூா்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் எனத் தெரிகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT