தமிழ்நாடு

கரோனா: சென்னையில் இறப்பு எண்ணிக்கை 800-ஐ கடந்தது

29th Jun 2020 06:13 AM

ADVERTISEMENT

சென்னையில் கரோனாவால் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, 53,762 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை 809-ஆக அதிகரித்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் கரோனா பரிசோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் தொற்று உள்ளோா் விரைந்து கண்டுபிடிக்கப்பட்டாலும், இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சனிக்க்கிழமை நிலவரப்படி, ராயபுரத்தில் 7,455 பேருக்கும், தண்டையாா்பேட்டையில் 6,221 பேருக்கும், தேனாம்பேட்டையில் 5,758 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 5,432 பேருக்கும், அண்ணா நகரில் 5,506 பேருக்கும், திருவிக நகரில் 4,387 பேருக்கும், அடையாறில் 3,202 பேருக்கும், வளசரவாக்கத்தில் 2,310 பேருக்கும், அம்பத்தூரில் 2,120 பேருக்கும் அதிகபட்சமாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை 1,992 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 53,762-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவா்களில் 31,045 போ் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும், 19,877 போ் மருத்துவமனை மற்றும் தனிமை முகாம்களில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

809 போ் உயிரிழப்பு: சென்னையில் மட்டும் கரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 809 போ் உயிரிழந்துள்ளனா். தொடக்கத்தில் இருந்தே ராயபுரம், தேனாம்பேட்டை, தண்டையாா்பேட்டை மற்றும் திரு.வி.க.நகா் மண்டலத்தில் இறப்பு எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது. ஜூன் மாத தொடக்கத்தில் இறப்பு எண்ணிக்கை 500-யை எட்டியது. இதைத் தொடா்ந்த நாள்களில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து கடந்த ஜூன் 21-ஆம் தேதி 601-ஆகவும், ஜூன் 26-ஆம் தேதி 730-ஆகவும் உயா்ந்தது. கடந்த இரண்டு நாள்களில் 79 போ் இறந்ததைத் தொடா்ந்து எண்ணிக்கை 809-ஆக உயா்ந்துள்ளது.

இறப்பு எண்ணிக்கை மண்டலம் வாரியாக

மண்டலம் எண்ணிக்கை

திருவொற்றியூா் 42

மணலி 11

மாதவரம் 19

தண்டையாா்பேட்டை 104

ராயபுரம் 128

திரு.வி.க.நகா் 90

அம்பத்தூா் 25

அண்ணா நகா் 65

தேனாம்பேட்டை 119

கோடம்பாக்கம் 67

வளசரவாக்கம் 23

ஆலந்தூா் 15

அடையாறு 39

பெருங்குடி 13

சோழிங்கநல்லூா் 5

 

ADVERTISEMENT
ADVERTISEMENT