தமிழ்நாடு

திருவள்ளூரில் ஒரே நாளில் 191, தேனியில் 61 பேருக்கும் கரோனா தொற்று

29th Jun 2020 11:51 AM

ADVERTISEMENT

 

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 191 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சென்னையின் அண்டை மாவட்டமான திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக  கரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வருகின்றது. சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் அதிகளவில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. 

சென்னையை ஒட்டியுள்ள மண்டலங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி அதிகபட்சமாக ஆவடி, சோழவம் உள்ளிட்ட இடங்களில் தொற்று அதிகமாகப் பதிவாகியுள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 191 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

இந்நிலையில், இந்த மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 3,715 ஆக உயர்ந்துள்ளது. 

தேனி

இந்த மாவட்டத்தில் புதிதாக 61 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 632 ஆக உயர்ந்துள்ளது. 

வெளி மாநிலங்களில் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வருவோரால் கரோனா தொற்று மேலும் அதிகரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT