தமிழ்நாடு

ஆம்பூர் இந்தியன் வங்கிக் கிளைக்கு சீல்

29th Jun 2020 06:02 PM

ADVERTISEMENT


ஆம்பூர்: ஆம்பூர் இந்தியன் வங்கிக் கிளைக்கு வருவாய் துறையினர் திங்கள்கிழமை சீல் வைத்தனர்.

ஆம்பூர் உமர்சாலையில் இந்தியன் வங்கி ஆம்பூர் கிளை இயங்கி வருகின்றது.  

கரோனா நோய் தொற்று பரவத் தொடங்கியது முதல் ஆம்பூர் இந்தியன் வங்கிக் கிளையில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லையென்று புகார் எழுந்தது.  தினமும் நகர காவல் நிலைய காவல்துறையினர் வங்கிக் கிளைக்குச் சென்று வாடிக்கையாளர்களை கட்டுப்படுத்தினர்.   

ஆனாலும் சமூக இடைவெளி சரிவர கடைப்பிடிக்கப்படவில்லை.  

ADVERTISEMENT

அதைத் தொடர்ந்து  ஆம்பூர் வட்டாட்சியர் சி. பத்மநாபன் தலைமையில் வருவாய்த் துறையினர் வங்கிக் கிளைக்கு சென்று வாடிக்கையாளர்கள் மற்றும் அலுவலர்களை வெளியேற்றிவிட்டு கிளையை பூட்டி சீல் வைத்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT