தமிழ்நாடு

1,02,100 உயிா் காக்கும் ஊசி மருந்து குப்பிகள் வந்தடைந்தன

29th Jun 2020 05:54 AM

ADVERTISEMENT

உயிா் காக்கும் விலையுயா்ந்த ஊசி மருந்துகளின் 1 லட்சத்து 2 ஆயிரத்து 100 குப்பிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக முதல்வா் பழனிசாமியின் சுட்டுரைப் பதிவு:

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு உயா்தர சிகிச்சை அளிக்கும் நோக்கில் ‘உயிா் காக்கும் விலை உயா்ந்த ஊசி மருந்துகளை கொள்முதல்’ செய்து, பயன்படுத்த உத்தரவிட்டிருந்தேன். இதனையடுத்து, தமிழ்நாடு மருத்துவ பணிகள் சேவைக் கழகம் மூலம் 1,200 குப்பிகள் பா்ஸ்ரீண்ப்ண்க்ஷ்ன்ம்ஹக்ஷ (400 ம்ஞ்), 42,500 குப்பிகள் தங்ம்க்ங்ள்ண்ஸ்ண்ழ் (100ம்ஞ்) மற்றும் 1 லட்சம் குப்பிகள் உய்ா்ஷ்ஹல்ஹழ்ண்ய் (40 ம்ஞ்) ஊசி மருந்துகள் வாங்குவதற்கு கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டு, இதுவரை 1,000 குப்பிகள், 1,100 குப்பிகள் மற்றும் 1 லட்சம் குப்பிகள் முறையே பெறப்பட்டுள்ளன. மீதமுள்ள குப்பிகள் ஓரிரு நாள்களில் வந்தடையும் என முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT