தமிழ்நாடு

சாத்தான்குளம் சம்பவம்: சிபிஐ விசாரணை கேட்டு திமுக வழக்குத் தாக்கல் செய்யும்

27th Jun 2020 07:33 PM

ADVERTISEMENT

ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கை தமிழக அரசு முறையாக விசாரித்து ஒழுங்காக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சிபிஐ விசாரணை கேட்டு திமுக வழக்குத் தாக்கல் செய்யும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டலில், சாத்தான்குளத்தில் கொலை செய்யப்பட்ட இருவரது போஸ்ட்மார்ட்டம் அறிக்கை வராத நிலையில் பென்னிக்ஸ் மூச்சுத்திணறலில் இறந்தார் என்றும், அவரது தந்தை ஜெயராஜ் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார் என்றும் முதலமைச்சர் எதனடிப்படையில் சொன்னார்?

தவறு அரசின் பக்கம் என்றுதானே அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் கொடுத்தீர்கள்?

இயற்கையான மரணம் என்றால் கொடுத்திருப்பீர்களா?

ADVERTISEMENT

காவல் நிலையத்தை சாத்தான் வேட்டைக்காடாக மாற்றியவர்களை கொலை வழக்கில் கைது செய்திடுக!

ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கை தமிழக அரசு முறையாக விசாரித்து ஒழுங்காக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சிபிஐ விசாரணை கேட்டு திமுக வழக்குத் தாக்கல் செய்யும்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT