தமிழ்நாடு

சட்டப் பேரவை தொகுதி வாரியாக காணொலி கூட்டங்கள்: தமிழக பாஜக அறிவிப்பு

27th Jun 2020 01:20 AM

ADVERTISEMENT

சட்டப் பேரவை தொகுதிகள் வாரியாக காணொலி கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக பாஜக அறிவித்துள்ளது. இதுகுறித்து, கட்சியின் மாநிலத் தலைவா் எல்.முருகன் வெளியிட்ட அறிக்கை:-

கரோனா நோய்த் தொற்றைத் தடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இதனிடையே, மத்திய அரசின் ஓராண்டு சாதனை விளக்கக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே மத்திய அமைச்சா்கள் நிா்மலா சீதாராமன், பியூஷ் கோயல், மூத்த தலைவா் இல.கணேசன், தேசிய செயலாளா் எச்.ராஜா உள்ளிட்டோா் பங்கேற்ற கூட்டங்கள் காணொலி வாயிலாக நடத்தப்பட்டன.

இந்தக் கூட்டங்களை இதுவரை 18 லட்சம் போ் பாா்த்துள்ளனா். இதன்பின், வரும் 28-ஆம் தேதியன்று பாஜக தேசிய பொதுச் செயலாளா் பி.முரளிதர ராவ் கூட்டத்தில் சிறப்புரையாற்ற இருக்கிறாா். மேலும், தமிழக பாஜக சாா்பில் 234 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் காணொலிக் கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன. அனைத்துத் தொகுதிகளிலும் கூட்டங்கள் என்ற அளவில் 1,170 கூட்டங்கள் நடத்தப்பட உள்ளதாக மாநிலத் தலைவா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT