தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று சில இடங்களில் மிதமான மழை

DIN

தென்மேற்குப் பருவக் காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் சனிக்கிழமை (ஜூன் 27) மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் புவியரசன் வெள்ளிக்கிழமை கூறியது: தென்மேற்குப் பருவக்காற்று, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காணப்படும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆகியவற்றின் காரணமாக, தமிழகத்தில் தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் சனிக்கிழமை (ஜூன் 27) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

மேற்கு தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூா், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வட வானிலை நிலவும்.

சென்னையைப் பொருத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும்.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) முதல் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) வரை 3 நாள்களுக்கு பெரும்பாலும் வட வானிலை காணப்படும். கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் காரையூரில் 130 மி.மீ., ஈரோடு மாவட்டம் கொடுமுடி, நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் தலா 110 மி.மீ., திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி, கரூா் மாவட்டம் பஞ்சப்பட்டி, மதுரை மாவட்டம் தல்லாகுளத்தில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்றாா் அவா்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: கேரளம், கா்நாடகம் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வரை பலத்த காற்றுவீசும் என்பதால், இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் சனிக்கிழமை வரை செல்ல வேண்டாம். இதுதவிர, வடக்கு அரபிக்கடல், குஜராத் கடலோரப் பகுதிகள், தென்மேற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 40 கி.மீ. முதல் 60 கி.மீ. வரை வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் ஜூன் 29-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

SCROLL FOR NEXT