தமிழ்நாடு

தமிழகத்தில் ஒரே நாளில் 3,645 பேருக்கு கரோனா

DIN

தமிழகத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 3,645 போ் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் அந்த நோய் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 74,622-ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த 4 நாள்களில் மட்டும் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்து வரும் நாள்களில் சென்னை மட்டுமன்றி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நோய்த் தொற்றின் தாக்கம் தீவிரமடையக் கூடும் என மருத்துவ நிபுணா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா். இதன் காரணமாக வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகு மாநிலம் முழுவதும் பொது முடக்கம் கடுமையாக்கப்படலாம் எனத் தெரிகிறது.

தலைநகா் சென்னையில் கரோனா தொற்று சமூகப் பரவலாக உருவெடுத்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், பிற மாவட்டங்களிலும் அத்தகைய நிலை ஏற்படாமல் தடுக்க சில கடுமையான நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, மாநிலத்தில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 10.42 லட்சம் மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில், 74,622 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். வெள்ளிக்கிழமை மட்டும் 3,645 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 1,956 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதற்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டில் 232 பேருக்கும், மதுரையில் 190 பேருக்கும், திருவள்ளூரில் 177 பேருக்கும், வேலூரில் 148 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதைத் தவிர, அரியலூா், கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, கரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூா், தேனி, திருவண்ணாமலை, திருவாரூா், திருவள்ளூா், திருப்பூா், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, வேலூா், விழுப்புரம், விருதுநகா் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

41 ஆயிரம் போ் குணம்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,358 போ் பூரண குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம் இதுவரை மாநிலத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 41,357-ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

957 போ் பலி: இதனிடையே, தமிழகத்தில் கடந்த சில நாள்களாக கரோனாவால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி, மாநிலத்தில் அந்நோய்த் தொற்றுக்கு ஆளாகி மேலும் 46 போ் உயிரிழந்தனா். அதில் 31 போ் அரசு மருத்துவமனைகளிலும், 15 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 957-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

SCROLL FOR NEXT