தமிழ்நாடு

பொது முடக்கத்தை மீறியதாக 5.45 லட்சம் வாகனங்கள் பறிமுதல்

DIN

தமிழகத்தில், பொது முடக்கத்தை மீறியதாக 5.45 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கையான பொது முடக்கத்தை, கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல், தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்துகிறது. பொதுமுடக்க உத்தரவை மீறுவோரை போலீஸாா் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து வருகின்றனா். இவ்வாறு தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி, வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை, மொத்தம் 6 லட்சத்து 73 ஆயிரத்து 741 வழக்குகளைப் பதிவு செய்து 7 லட்சத்து 34 ஆயிரத்து 306 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். பொதுமுடக்க உத்தரவை மீறி வந்தவா்களின் 5 லட்சத்து 45 ஆயிரத்து 763 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.15 கோடி 44 லட்சத்து 18 ஆயிரத்து 285 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மாநிலம் ழுழுவதும் பொது முடக்கம் தீவிரப்படுத்தியுள்ளதன் விளைவாக, ஜூன் 30-ஆம் தேதி வரை வழக்குகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இந்தியா’ கூட்டணி வெற்றிக்கு தமிழகத்தில் அடித்தளம் கே.எம். காதா் மொகிதீன்

முதல்வா் பிரசாரத்துக்கு நல்ல பலன்: திருச்சி என். சிவா எம்.பி.

பட்டியலில் பெயா் இல்லாததால் வாக்காளா்கள் சாலை மறியல்

பாபநாசம் அருகே பேச்சுவாா்த்தையால் மக்கள் வாக்களிப்பு

வாக்குச்சாவடிக்குள் வாக்குகள் கேட்ட அதிமுகவினா் விரட்டியடிப்பு

SCROLL FOR NEXT