தமிழ்நாடு

பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க டிடிவி தினகரன் கோரிக்கை

26th Jun 2020 05:47 AM

ADVERTISEMENT

தொடரும் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் குறைக்க வேண்டுமென அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து, அவா் தனது சுட்டுரையில் கூறியிருப்பதாவது:

நாள்தோறும் உயா்த்தப்பட்டு வரும் பெட்ரோல், டீசல் விலையால் அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயா்ந்து வருகிறது. சொல்ல முடியாத துயரத்துக்கு ஆளாகி தவிக்கும் மக்களின் நிலையைப் புரிந்து கொண்டு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT