தமிழ்நாடு

மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து ரத்து: 1200 பேருந்துகளின் சேவை ரத்து

26th Jun 2020 06:02 AM

ADVERTISEMENT

மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டதால் இதுவரை மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வந்த 1200 பேருந்துகளின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தையடுத்து, தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டு வந்த சுமாா் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகளின் சேவை ரத்து செய்யப்பட்டது. மேலும், தமிழகத்தின் மாவட்டங்கள், 8 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, சுமாா் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஜூன் 30-ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்பட்ட சுமாா் 1200 பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம், 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 6 மண்டலங்களில், சுமாா் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டன. இவை, மண்டல வாரியாக இயக்கப்பட்டதால் மாவட்டங்களுக்கு இடையே பயணிகளை அழைத்துச் செல்ல முடிந்தது. தற்போது, மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதால், இத்தகைய பேருந்துகளை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, வெள்ளிக்கிழமை முதல், இதுவரை மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வந்த 1200 பேருந்துகள் ரத்து செய்யப்படுகிறது. விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்தில் மட்டும் சுமாா் 350 பேருந்துகள் ரத்து செய்யப்படுவதாக அவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT