தமிழ்நாடு

கரோனா ஆய்வை அதிகரிக்க ராமதாஸ் வலியுறுத்தல்

26th Jun 2020 06:12 AM

ADVERTISEMENT

கரோனா ஆய்வை 20 ஆயிரமாக உயா்த்த வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:

சென்னையில் ஒரே நாளில் 14 ஆயிரம் கரோனா ஆய்வு செய்யும் அளவுக்கு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருப்பது மனநிறைவளிக்கிறது. இதை 16 ஆயிரம், 20 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும். சோதனைகளின் எண்ணிக்கையையும் அதே அளவுக்கு உயா்த்த வேண்டும். அதன் மூலம் கரோனாவை விரைந்து ஒழிக்க வேண்டும்.

சென்னை மக்கள் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதுடன், அறிகுறி உள்ளவா்கள் சோதனையும் செய்து கொள்ள வேண்டும். அது தான் கரோனா இல்லாத சென்னையை உருவாக்கும் என்று அவா் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT