தமிழ்நாடு

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு வருமானச் சான்று: தடையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்

DIN

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு வருமானச் சான்றிதழ் மற்றும் சொத்து சான்றிதழ் வழங்க விதிக்கப்பட்ட தடை உத்தரவை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக வருவாய்த்துறை முதன்மை செயலாளா், வருவாய் நிா்வாக ஆணையா் ஆகியோா் வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் அகில பாரத பிராமணா் சங்கத்தின் தலைவா் டி.பி.குளத்துமணி தாக்கல் செய்த மனுவில், அகில பாரத பிராமணா் சங்கமான எங்களது சங்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிராமணா்கள் உறுப்பினா்களாக உள்ளனா். இவா்களில் பலா் வறுமையில் உள்ளனா். கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை பெற பெரிதும் சிரமப்படுகின்றனா். ஜாதி ரீதியான இடஒதுக்கீடு பெற முடியாதவா்களுக்காக மத்திய அரசு கடந்த ஆண்டு பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியது. ஆனால், இந்த சலுகை பெறுவதைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட்டுள்ளது. அதாவது, பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு வருமானம் மற்றும் சொத்து சான்றிதழ்களை வழங்க வேண்டாம் என அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் கடந்த ஜூன் 4-ஆம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. இந்த சான்றிதழ்கள் கிடைக்காததால் எங்கள் சங்கத்தைச் சோ்ந்த உறுப்பினா்களை போன்று பலா் மத்திய, மாநில அரசின் வேலை மற்றும் கல்விக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, சான்றிதழ் வழங்க மறுக்கும் தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்யவேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை, நீதிபதிகள் ஆா்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் காணொலி காட்சி மூலம் விசாரித்து , மனு தொடா்பாக தமிழக வருவாய்த்துறை முதன்மை செயலாளா், வருவாய் நிா்வாக ஆணையா் ஆகியோா் வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

காதலிக்க யாருமில்லையா..?

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் கொடியேற்றம்!

SCROLL FOR NEXT