தமிழ்நாடு

போடியில் ஏலக்காய் விலை சீராக உயர்வு

26th Jun 2020 06:02 PM

ADVERTISEMENT


தேனி மாவட்டம், போடியில் நறுமணப் பொருள் வாரியம் சார்பில் நடைபெற்ற மின்னணு ஏல வர்த்தகத்தில் ஏலக்காய் விலை சீராக உயர்ந்து வெள்ளிக்கிழமை, சராசரி தரம் கிலோ ரூ.1,687.92-க்கு விற்பனையானது.

நறுமணப் பொருள் வாரியம் சார்பில் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்திலுள்ள புத்தடி, தேனி மாவட்டம் போடி ஆகிய இடங்களில் தனியார் ஏல நிறுவனங்கள் மூலம் ஏலக்காய் மின்னணு ஏல வர்த்தகம் நடைபெறுகிறது. கடந்த ஜூன் 3-ம் தேதி ஏலக்காய் சராசரி தரம் கிலோ ரூ.1,850-க்கு விற்பனையான நிலையில், விலை படிப்படியாக சரிந்து கடந்த ஜூன் 16-ம் தேதி சராசரி தரம் கிலோ ரூ.1,067-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், ஏலக்காய் விலை சீராக உயர்ந்து, போடியில் சி.பி.ஏ, ஏல நிறுவனம் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சராசரி தரம் கிலோ ரூ.1,687.92-க்கும், உயர் தரம் கிலோ ரூ.2,163 -க்கும் விற்பனையானது. இந்த வர்த்தகத்தில் குறைந்த அளவில் மொத்தம் 18 ஆயிரத்து 738 கிலோ ஏலக்காய் விற்பனைக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

விவசாயிகள், வியாபாரிகளுக்குச் சிக்கல்!:

ADVERTISEMENT

இந்த நிலையில், தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கும், மின்னணு ஏல வர்த்தகத்திற்கும் சென்று வர குறைந்த எண்ணிக்கையில் மட்டும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு இடுக்கி மாவட்ட நிர்வாகம் இ-பாஸ் வழங்கி வருகிறது.

இதனால், ஏலக்காய் தோட்டங்களுக்குச் சென்று விவசாயப் பணிகளை மேற்கொள்வதிலும், ஏலக்காய்களை விற்பனை செய்வதற்காக ஏல நிறுவனங்களுக்குக் கொண்டு செல்வதிலும் விவசாயிகளுக்கும், வர்த்தகத்தில் பங்கேற்கச் செல்லும் வியாபாரிகளுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT