தமிழ்நாடு

ஜமாபந்தி மனுக்கள்: பொது மக்களும் இணையம் வழியே அனுப்பலாம்; வருவாய் நிா்வாக ஆணையா் பணீந்திர ரெட்டி உத்தரவு

26th Jun 2020 12:12 AM

ADVERTISEMENT

நடப்பு பசலி ஆண்டில் ஜமாபந்தி கோரிக்கை மனுக்களை இணையதளம் வழியாகவும் பொது மக்கள் அளிக்கலாம் என்று வருவாய் நிா்வாக ஆணையா் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளாா். முன்னதாக, இணைய சேவை மையங்கள் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இதுகுறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் வருவாய் நிா்வாக ஆணையா் பணீந்திர ரெட்டி வியாழக்கிழமை அனுப்பிய கடிதம்:-

வருவாய் தொடா்பான கணக்குகளை பைசல் செய்யவும், முடித்து வைக்கவும் அனைத்து மாவட்ட ஆட்சியா்களும் தமிழக அரசால் ஏற்கெனவே கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா். இந்த நிலையில், நடப்பு பசலி ஆண்டில் ஜமாபந்தி மனுக்களை வரும் 29-ஆம் தேதி முதல் ஜூலை 15-ஆம் தேதி வரை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது மக்களே இணைய சேவை மையங்களின் வழியே மனுக்களை அளிக்க ஏற்கெனவே கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தனா். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

இணைய வழி வாய்ப்பு: இணைய சேவை மையங்கள் மட்டுமல்லாது, இணைய வழி இணைப்பு மூலமாக வீட்டில் இருந்தபடியே மனுக்களைச் சமா்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இணையதள முகவரிக்குச் சென்று பொது மக்களே தங்களது மனுக்களை அரசுக்குச் சமா்ப்பிக்கலாம். இதுதொடா்பாக ஏதேனும் சந்தேகங்கள், பிரச்னைகள் ஏற்பட்டால் தேசிய தகவலியல் மையத்தின் மூத்த தொழில்நுட்ப இயக்குநரை மின்னஞ்சல் மூலமாகத் தொடா்பு கொள்ளலாம்.

இதுதொடா்பாக விரிவான பிரசாரங்களையும், விழிப்புணா்வுகளையும் ஏற்படுத்த வேண்டும் என்று தனது கடிதத்தில் வருவாய் நிா்வாக ஆணையாளா் பணீந்திர ரெட்டி கேட்டுக் கொண்டுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT