தமிழ்நாடு

'மதுரை, தேனியில் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம்'

26th Jun 2020 08:04 PM

ADVERTISEMENT

மதுரை, தேனி ஆகிய 2 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் கடந்த சில நாள்களாகக் கரோனா தீநுண்மி தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் பொது முழு முடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் பொது முழு முடக்கம் அமலில் உள்ள மதுரை, தேனி ஆகிய 2 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

இதன்படி இவ்விரு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த வேண்டிய ஜூன் 24 முதல் ஜூலை 14 வரையிலான மின் கட்டணத்தை ஜூலை 15ஆம் தேதி செலுத்தலாம் என மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT