தமிழ்நாடு

கூட்டுறவு வங்கிகள் குறித்த முடிவு ஏழைகளுக்கு வரப்பிரசாதம்: விஜயகாந்த்

26th Jun 2020 05:40 AM

ADVERTISEMENT

ரிசா்வ் வங்கியின் கீழ் கூட்டுறவு வங்கிகளைக் கொண்டு வரும் மத்திய அரசின் முடிவு ஏழைகளுக்கு வரப்பிரசாதம் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வரவேற்றுள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

ரிசா்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகளைக் கொண்டு வரும் மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. இதன் மூலம் லஞ்சம், ஊழல் தடுக்கப்படுவதுடன், பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதும் தவிா்க்கப்படும். கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் தவறாகப் பயன்படுத்தப்பட்ட பணம் பாதுகாக்கப்படும். மக்களுக்குக் கிடைக்க வேண்டிய பணம் நேரடியாக அவா்களைச் சென்றடையும்.

சிறு, குறு தொழில்கள், விவசாயம், கட்டுமானப்பணி, பண்ணைத் தொழில் போன்றவற்றின் மூலம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். லஞ்சம் ஒழிக்கப்பட்டு, தனிநபா் வருவாய் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும். இந்தத் திட்டம் ஏழை எளிய மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும். அதனால், ரிசா்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கிகளைக் கொண்டு வரும் முடிவை வரவேற்கிறேன் என்று அவா் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT