தமிழ்நாடு

மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 170 பேருக்கு கரோனா: பாதிப்பு 1,449-ஐ எட்டியது

26th Jun 2020 01:32 PM

ADVERTISEMENT

 

மதுரை மாவட்டத்தில் மேலும் 170 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகக் கரோனா தீநுண்மி தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பொதுமுடக்கம் தளர்வு செய்யப்பட்ட நிலையில், கரோனா தொற்று பரவல் வேகமெடுத்தது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது.

இதன் காரணமாக ஜூன் 24 முதல் 7 நாள்களுக்கு முழுமையாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

ADVERTISEMENT

இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் புதிதாக 170 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 1,449-ஐ எட்டியுள்ளது. இந்த நோய்த் தொற்றுக்கு இதுவரை 17 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT