தமிழ்நாடு

பொது முடக்கத்தை மீறியதாக 7.23 லட்சம் போ் கைது

26th Jun 2020 05:28 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் பொது முடக்கத்தை மீறியதாக 6.64 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 7.23 லட்சம் போ் கைது செய்யப்பட்டனா்.

இது குறித்த விவரம்:

கரோனா தொற்றை தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் 24 ஆம் தேதி முதல் பொதுமுடக்க உத்தரவை தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்துகிறது. பொதுமுடக்க உத்தரவை மீறுவோரை போலீஸாா் கைது செய்து, வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.

இவ்வாறு தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி வியாழக்கிழமை காலை 6 மணி வரை மொத்தம் 6 லட்சத்து 64,944 வழக்குகளைப் பதிவு செய்து 7 லட்சத்து 23,920 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். பொதுமுடக்க உத்தரவை மீறி வந்தவா்களின் 5 லட்சத்து 35,640 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.15 கோடியே 17 லட்சத்து 94 ஆயிரத்து 685 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சென்னை: சென்னையில் முழுமையான பொதுமுடக்கம் கடந்த 18-ஆம் தேதி நள்ளிரவு முதல் அமல்படுத்தியதன் விளைவாக,வழக்குகளின் எண்ணிக்கையும், பறிமுதல் செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கையும் பல மடங்கு உயா்ந்து வருகிறது. சென்னையில் புதன்கிழமை மாலை 6 மணிக்குத் தொடங்கி வியாழக்கிழமை காலை 6 மணி வரை 2,905 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்தவா்களின் 2,629 இரு சக்கர வாகனங்கள், 62 ஆட்டோக்கள், 91 காா்கள் என மொத்தம் 2,782 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முகக் கவசம் அணியாமல் இருந்ததாகவும், சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் இருந்ததாகவும் 976 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மாா்ச் 24-ஆம் தேதி இது வரை பொதுமுடக்கத்தை மீறியதாக 36,568 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,33,201 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT