தமிழ்நாடு

தமிழகத்தில் சூரியகிரகணம் தெரியத் தொடங்கியது

21st Jun 2020 11:31 AM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் சென்னை, திருச்சி, திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியது.

சூரியன், பூமி, நிலவு இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வு கிரகணம் என கூறப்படுகிறது. அந்த வகையில் இன்று சூரியனுக்கும், பூமிக்கும் இடையே நிலவு வருவதால் வளை வடிவ சூரிய கிரகணம் ஏற்படுகிறது

இன்று காலை 10.17 மணியளவில் தொடங்கியுள்ள சூரிய கிரகணம் தமிழகத்தில் திருச்சி, திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் தெரியத் தொடங்கியது. சூரிய கிரகணம் பிற்பகல் 1.24 மணி வரை தெரியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

தமிழகத்தில் 34% சூரியகிரகணம் தெரியும் என்றும் சென்னையில் அதிகபட்ச கிரகணம் 11:58 மணிக்கு தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வானில் ஏற்பட்டுள்ள நெருப்பு வளைய சூரியகிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்க கூடாது, சூரிய வடிகட்டி கண்ணாடியை பயன்படுத்தி மட்டுமே பாா்க்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

இதையடுத்து, பல்வேறு மாவட்டங்களில் அறிவியல் மையங்களின் சார்பில் சூரிய கிரகணத்தைக் காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

ADVERTISEMENT
ADVERTISEMENT