தமிழ்நாடு

சென்னை காவல் துறையில் ஒரே நாளில் இணை ஆணையா் உள்பட 18 பேருக்கு கரோனா

21st Jun 2020 12:35 AM

ADVERTISEMENT

சென்னை காவல்துறையில் ஒரே நாளில் இணை ஆணையா் உள்பட 18 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டனா்.

இது குறித்த விவரம்: கரோனா தடுப்புப் பணியில் காவல்துறையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். இதனால் கரோனாவால் காவல்துறையினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். சென்னையில் கரோனாவால் பாதிக்கப்படும் காவல்துறையினருக்கு சிகிச்சை அளிப்பதற்காக கிண்டி ஐஐடி வளாகத்தில் உள்ள ஒரு விடுதியில் தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றும் ஒரு பெண் இணை ஆணையா் கரோனாவால் பாதிக்கப்பட்டு, போரூரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.இதேபோல சைதாப்பேட்டை காவல் ஆய்வாளா், ராயபுரம் காவல் ஆய்வாளா்,பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளா் என மொத்தம் 18 போ் சனிக்கிழமை கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.

ஒரே நாளில் சென்னை காவல்துறையில் 18 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டது போலீஸ் வட்டாரத்தில் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இதன் மூலம் சென்னை காவல்துறையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 800-ஐ தாண்டியுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 330 போ் பணிக்கு திரும்பியுள்ளனா். 320 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். எஞ்சியவா்கள், மருத்துவமனைகளிலும், ஐ.ஐ.டி விடுதியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT