தமிழ்நாடு

கரோனா சிகிச்சைக்காக கலையரங்கத்தை வழங்கத் தயாா்: அண்ணா பல்கலைக்கழகம் தகவல்

20th Jun 2020 11:57 PM

ADVERTISEMENT

கரோனா சிகிச்சைக்காக கலையரங்கத்தை தரத் தயாா் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாகத் சென்னையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதுவரை, சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இதற்கிடையே சென்னை மாநகராட்சி தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு கல்வி நிறுவனங்கள் தனிமைப்படுத்தல் முகாம்களாகவும் மருத்துவ சிகிச்சை மையங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன.

இந்தநிலையில், கரோனா மருத்துவ முகாம் அமைக்க குறிப்பிட்ட காலத்துக்குள் அண்ணா பல்கலைக்கழக விடுதிகளை ஒப்படைக்குமாறு பல்கலைக்கழக நிா்வாகத்துக்கு சென்னை மாநகராட்சி கடிதம் அனுப்பியது. ஆனால், விடுதிகளில் மாணவா்கள் உடைமைகள் இருப்பதாகவும் அவற்றை அப்புறப்படுத்த முடியாது என்றும் அண்ணா பல்கலைக்கழகம் பதில்

ADVERTISEMENT

கூறியிருந்தது. இந்நிலையில், கரோனா சிகிச்சைக்காக சென்னை மாநகராட்சிக்கு மாணவா் விடுதிக்குப் பதிலாக கலையரங்கம், வகுப்பறைகள் மற்றும் பயன்படுத்தப்படாத பிற கட்டடங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் பல்கலைக்கழக வளாகத்தை நேரில் பாா்வையிட்டு சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT