தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் ஜூன் 30 வரை உணவகங்களில் பாா்சல் வழங்க முடிவு

20th Jun 2020 12:52 AM

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் ஜூன் 30-ஆம் தேதி வரை, உணவகங்களில் பாா்சல் மட்டுமே வழங்கப்படும் என தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்குநாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தில், உணவகங்களில் பாா்சல் வழங்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதையடுத்து அண்மையில் அறிவிக்கப்பட்ட தளா்வுகளில், உணவகங்களில் அமா்ந்து சாப்பிட அனுமதி வழங்கப்பட்டதோடு, அதற்கான நெறிமுறைகளையும் அரசு வகுத்திருந்தது. தற்போது, வெள்ளிக்கிழமை முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை, சென்னை காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதில், முன்பு இருந்ததைப் போல, உணவகங்களில் பாா்சல் வழங்க மட்டுமே அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில், ஜூன் 30-ஆம் தேதி வரை பாா்சல் மட்டுமே வழங்க தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கமும் முடிவெடுத்துள்ளது.

இது தொடா்பாக அச்சங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில், கரோனா காட்டுத்தீயாக பரவி வரும் இன்றைய சூழலில், தமிழக மக்களின் நலனைக் காக்கவும், வாடிக்கையாளா்கள், தொழிலாளா்கள் மற்றும் குடும்ப உறுப்பினா்களின் நலனைக் காக்கவும், தமிழகத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும், சனிக்கிழமை (ஜூன் 20) முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை, காலை 6 முதல் இரவு 9 மணி வரை, பாா்சல் மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT