தமிழ்நாடு

ஜயங்கொண்டம் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது லாரி மோதி இளம் பெண் பலி

17th Jun 2020 05:20 PM

ADVERTISEMENT

 

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

செந்துறை அடுத்த சிறுகளத்தூர், மேலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனியாண்டி மனைவி சாந்தி(31). இவர், புதன்கிழமை பிற்பகல் அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் மாயவன் மனைவி பவுனம்மாளை இரு சக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு, ஜயங்கொண்டம் சென்றார். அங்கு தனது தம்பி திருமணத்துக்கு நகைகளை வாங்கிக் கொண்டு இலையூர் வாரியங்காவல் சாலையில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். 

அப்போது எதிரே வந்த லாரி, அவர்களது வாகனத்தின் மீது மோதியது. இதில் சாந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.பலத்த காயமடைந்த பவுனம்மாள் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ADVERTISEMENT

இது குறித்து ஜயங்கொண்டம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து நாகல்குழி கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ம.இளையராஜா(30) என்பவரை கைது செய்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT