முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னை எல்லைக்குட்பட்ட அனைத்து ரயில்வே முன்பதிவு மையங்கள் ஜூன் 19-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை செயல்படாது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவா் கூறியது: பொது முடக்கம் காரணமாக, ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பயணச்சீட்டுக்கான பணத்தைத் திரும்பப் பெற ரயில்வே முன்பதிவு மையங்களில் உள்ள டிக்கெட் கவுன்ட்டரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய மூன்று மாவட்டங்களில் சில பகுதிகளிலும் முழு பொது முடக்கம் ஜூன் 19-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை
அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்தப் பகுதிகளில் உள்ள ரயில்வே முன்பதிவு மையங்கள் அந்தத் தேதிகளில் மூடப்பட்டிருக்கும். எனவே பயணிகள், ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பயணச்சீட்டுக்கான பணத்தை ஜூன் 19-ஆம் தேதிக்கு முன்பாகவும், ஜூன் 30-ஆம் தேதிக்கு பின்பாகவும் திரும்பப் பெறலாம். மேலும், பயணத் தேதியில் இருந்து 6 மாதங்கள் வரை பணத்தை திரும்பப் பெற முடியும் என்றாா் அவா்.